திலினி உள்ளிட்ட நால்வருக்கு, நவம்பர் 30 வரை விளக்கமறியல்!

திலினி உள்ளிட்ட நால்வருக்கு, நவம்பர் 30 வரை விளக்கமறியல்!

(UTV | கொழும்பு) –

பண மோசடி தொடர்பான குற்றச்சாட்டில் கைதான திலினி பிரியமாலி, ஜானகி சிறிவர்தன, இசுரு பண்டார மற்றும் பொரளை சிறிசுமண தேரர் ஆகியோரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் முன் குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களை எதிர்வரும் நவம்பர் மாதம் 30ஆம் திகதி வரை  விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியுடன் தொடர்புடையவர்கள் குறித்து நாளுக்கு நாள் பல தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

COMMENTS

Wordpress (0)
Disqus ( )