உள்நாடு

நாட்டின் அனைத்து திரையரங்குகளிலும் திரைப்பட டிக்கட்டுகளுக்கு 50 வீத விலைக்கழிவு !

(UTV | கொழும்பு) –     பெப்ரவரி 04 ஆம் திகதியன்று, நாட்டின் அனைத்து திரையரங்குகளிலும் திரைப்பட டிக்கட்டுக்களுக்கு அறவிடப்படும் கட்டணம் 50 வீத விலைக்கழிக்கப்படுமென பதில் ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான சாந்த பண்டார அறிவித்தார்.

நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தையொட்டி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பித்ததையடுத்து குறித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அதேவேளை, அன்றைய தினம் பொழுதுபோக்கு இடங்களான பூங்காக்கள் , தாவரவியல் பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களை மக்கள் இலவசமாக பார்வையிடவும் அமையச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top