“சஜித்தின், கேட்டாபாயவுக்கான கடிதத்தை கிண்டலடிக்கும் ரணில் “

(UTV | கொழும்பு) –   மூன்று அச்சங்கள் என்பது மரிக்கார் அச்சம், ரோசி அச்சம் மற்றும் ஹிருணிகா அச்சம் என்பன அல்ல எனவும் மக்கள் கூட்டத்திற்கே நோய் அச்சம், மரண அச்சம், அமானுஷ்ய அச்சம் என்று மூன்று அச்சங்கள் ஏற்படும் எனவும் தனிநபருக்கு அப்படியான அச்சங்கள் ஏற்படாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு மூன்று அச்சங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறினார். இதற்கு இன்று பதிலளித்து உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
 
முஜிபுர் ரஹ்மான், ஜனாதிபதிக்கு மூன்று அச்சங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறினார். மூன்று அச்சங்கள் ஒரு நபருக்கு ஏற்படாது ஒரு சனக்கூட்டத்திற்கே மூன்று அச்சங்கள் ஏற்படும். விசால மாநகரின் மக்களுக்கே மூன்று அச்சங்கள் ஏற்பட்டன.  நோய் அச்சம், மரண அச்சம் மற்றும் அமானுஷ்ய அச்சங்கள் சனக்கூட்டத்திற்கு ஏற்படலாம். அந்த விடயத்தை தெளிவுப்படுத்திக்கொள்ள ரதன சூத்திரத்தை கேளுங்கள் என ஜனாதிபதி, முஜிபுர் ரஹ்மானுக்கு கூறியுள்ளார்.
 
அதேவேளை நான் ஒருபோதும் பிரதமர் பதவியை கோரவில்லை. எனினும் தற்போது என்னை விமர்சிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் பிரதமர் பதவியை வழங்குமாறு அன்றைய ஜனாதிபதி கோடடாபய ராஜபக்சவிடம் எழுத்து மூலமாக கோரிக்கை விடுத்திருந்தார்.
 
அத்துடன் பிரதமர் பதவியை கோரி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அன்று கோட்டாபய ராஜபக்சவுக்கு அனுப்பிய கடிதத்தை அவையில் தாக்கல் செய்வதாகவும் அதனை அவை குறிப்பில் சேர்க்குமாறும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.
 
நான் பிரதமர் பதவியை கோரியதாக எதிர்க்கட்சித் தலைவர் கூறினார். நான் பிரதமர் பதவியை கோரவில்லை. என்னை அழைத்து வழங்கினர். மாநாயக்க தேரர்கள் உட்பட பலர் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு கூறினர்.
 
நான் கேட்கவில்லை.கடிதம் அனுப்பவில்லை. எனினும் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு கடிதம் அனுப்பியதை எதிர்க்கட்சித் தலைவர் மறந்து விட்டார் என நினைக்கின்றேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் கோட்டாபய ராஜபக்சவுக்கு அனுப்பிய கடிதத்தை ஜனாதிபதி அவையில் வாசித்தார்.
 
“ கௌரவ ஜனாதிபதி அவர்களே. எதிர்க்கட்சியின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையிலான ஏனைய கட்சிகளுடன் இணைந்து குறுகிய கால அரசாங்கத்தை அமைக்கவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் என்ற வகையில் பிரதமர் பதவியை ஏற்பது என தீர்மானித்துள்ளேன்” என எதிர்க்கட்சித் தலைவர், கோட்டாபய ராஜபக்சவுக்கு அனுப்பி இருந்த கடிதத்தில் கூறியிருந்தார். ஏன் என்னை திட்டுகிறீர்கள். எதிர்க்கட்சித் தலைவர் கடிதத்தை அனுப்பும் போது நான் பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்து விட்டேன் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *