உலகம்

பங்களாதேஷில் நீருக்கடியில் போக்குவரத்து செய்யக்கூடிய சுரங்கப்பாதை

(UTV | டாக்கா ) –     பங்களாதேஷில் சீனாவின் நிதியுதவியுடன் நீருக்கடியில் போக்குவரத்து செய்யக்கூடியதானசுரங்கப்பாதை 2023 ஆண்டு ஜனவரியில் திறக்கப்பட உள்ளது.

 

இத்திட்டத்தின் நிர்மாணிப்புக்கான கட்டுமானப்பணிகள் நிறைவினை கொண்டாடும் விழா இன்று நடைப்பெற்றது.
தெற்காசிய நாட்டிலேயே முதல் நீருக்கடியில் சுரங்கப்பாதை இதுவாகும்.

ஊடக அறிக்கைகளின்படி, சீனாவின் எக்ஸிம் வங்கியின் நிதி உதவியுடன் சீனா கம்யூனிகேஷன்ஸ் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனம் சுரங்கப்பாதையை கட்டியது.

பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மான் சுரங்கப்பாதை, துறைமுக நகரமான சிட்டகாங்கில் கர்ணபுலி ஆற்றின் கீழ் செல்கிறது. இது 1.1 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் கட்டப்பட்டது.

விழாவில் கலந்து கொண்ட பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, இந்த சுரங்கப்பாதை இணைப்பை மேம்படுத்தும் மற்றும் வணிகங்களுக்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

இச் சுரங்கப்பாதை சிட்டகாங்கில் பயண நேரத்தைக் குறைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பில் மக்களிடத்தில் பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளது.

திறக்கப்பட்டால், சுரங்கப்பாதையின் நீருக்கடியில் பகுதி சுமார் 3.3 கிலோமீட்டர் (2 மைல்) தூரம் வரை பயணம் செய்ய முடியும் எனவும் அன்வாரா மற்றும் படேங்கா நகரங்களுக்கு இடையே பயண நேரத்தை குறைக்க உதவும் என்றும் உள்ளூர் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top