ஊழியர்களின் பணி நாட்களை குறைத்தது ஐரோப்பா!

(UTV | லண்டன்) –    ஐரோப்பாவை சேர்ந்த சில நாடுகள் பணியாளர்களின் வேலை நாட்களை வாரத்தின் நான்கு நாட்களாக குறைத்துள்ளது.  இத்திட்டத்தில் 100 நிறுவனங்கள் கைச்சாத்திட்டுள்ளன.

இத்திட்டம் நடைமுறையில் சாத்திய என்பதை பரிட்சயப்படுத்தும் வகையில் 4 நாட்கள் வேலை திட்டம் கடந்த ஜூன் மாதம் நடைமுறைப்படுத்தப்பட்டது. தொடர்ந்து 6 மாதங்கள் சோதனை அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதில் சுமார் 3,300 ஊழியர்கள் பங்கேற்று பணியாற்றி வந்தனர்.

இந்த திட்டமானது, பணி நேரம் அதிகமாக இருப்பதால் ஊழியர்கள் சிரமத்தை களையும் அதே வேளையில் பணியும் பாதிக்காத வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டன. இதன் முடிவில் 88 சதவீத நிறுவனங்கள், இத்திட்டம் தங்கள் வணிகத்துக்கு சாதகமாக இருப்பதாக தெரிவித்தன. 15 சதவீதம் உற்பத்தித்திறன் உயர்ந்துள்ளதாகவும், மற்ற பணிகளில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தெரிவித்தன. இந்த நிலையில் இங்கிலாந்தில் வாரத்தில் 4 நாட்கள் வேலை திட்டத்தில் 100 நிறுவனங்கள் கையொப்பமிட்டுள்ளன. இந்த நிறுவனங்களில் சுமார் 2,600 பேர் பணியாற்றி வருகிறார்கள்.

இதில் பெரு நிறுவனங்களான அடாம் வங்கி மற்றும் உலகளாவிய சந்தைப்படுத்துதல் நிறுவனமான ஆவின் ஆகியவையும் 4 நாட்கள் வேலை திட்டத்தில் கையொப்பமிட்டுள்ளன. இந்த 2 நிறுவனங்களிலும் தலா 450 ஊழியர்கள் வேலை பார்க்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *