(UTV |அம்பாறை) – அம்பாறை மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களை கடத்த முற்பட்ட சந்தேகநபர் கைது!
அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாடசாலை மாணவர்களான 11 வயது மதிக்கத்தக்க இருவரை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் கடத்த முயற்சிப்பதாக பொலிஸ் நிலையத்தில் கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைவாக சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் எஸ்.எல்.சம்சுதீன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் முன்னெடுத்த அதிரடி நடவடிக்கையில், சம்பவத்துடன் தொடர்புபட்ட கல்முனையை சேர்ந்த 27 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.