இந்தோனேஷியாவில் எரிமலை வெடிப்பு

இந்தோனேஷியாவில் எரிமலை வெடிப்பு

(UTV | கொழும்பு) – இந்தோனேஷியாவின் ஜாவா தீவிலுள்ள மிகப்பெரிய எரிமலையாக சேமேரூ எரிமலை இன்று காலை வெடித்துள்ளது.

ஜாவா தீவின் கிழக்குப் பகுதியிலுள்ள 3600 மீற்றர் உயரமான இம்மலையின் உச்சியிலிருந்து 1.500 மீற்றர் உயரத்துக்கு, அதாவது கடல் மட்டத்திலிருந்து 5,176 மீற்றர் உயரத்துக்கு சாம்பல் பரவியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அபாய எச்சரிக்கைச் நிலை 4 ஆவது மட்டத்துக்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளர்.

அதன்படி எரிமலை வெடிப்பினால், அருகிலுள்ள பிரதேசங்களில் வசிக்கும் மக்களுக்கு அச்சுறுத்தல் உள்ளதாக இந்தோனேஷியாவின் எரிமலை, மற்றும் பூகோளவியல் அனர்த்த தணிப்பு மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

COMMENTS

Wordpress (0)
Disqus ( )