தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான வழக்கு- நீதிமன்றம் ஒத்திவைப்பு

தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான வழக்கு- நீதிமன்றம் ஒத்திவைப்பு

(UTV | அவுஸ்திரேலியா ) –  தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான வழக்கு- நீதிமன்றம் ஒத்திவைப்பு

கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான வழக்கின் விசாரணையை அவுஸ்திரேலிய நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

போலிஸார் தங்களின் சாட்சியங்களை இறுதி செய்யகூடிய வகையில் அவருக்கு எதிரான வழக்கின் விசாரணையை 2023 பெப்ரவரி 23 ஆம் திகதி வரை ஒத்திவைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டி20 உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடுவதற்காக அவுஸ்திரேலியா சென்றிருந்த வேளை, டேட்டிங் செயலியான டிண்டரில் சந்தித்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக 04 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இதனை தொடர்ந்து, சிட்னி டவுனிங் சென்டர் உள்ளூர் நீதிமன்றில், நீதவான் டேவிட் பிரைஸ், இன்று இந்த வழக்கை பெப்ரவரி 23-ம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

(தொடர்ந்தும், அவருக்கான கடுமையான நிபந்தனைகள் மற்றும் இரவு நடமாட்ட கட்டுப்பாடு,
குற்றச்சாட்டை முன்வைத்துள்ள பெண்ணை தொடர்பு கொள்ள அனுமதியில்லை
.மேலும் அவர் சமூக ஊடகங்கள் அல்லது டேட்டிங் செயலிகளை பயன்படுத்தவும் அனுமதிக்கப்படுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. )

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

COMMENTS

Wordpress (0)
Disqus ( )