(UTV | கொழும்பு) – நாட்டில் இருந்து புறப்படுபவர்கள் 60 டொலர் வரி செலுத்த வேண்டுமா?
இலங்கை சர்வதேச விமான நிலையம் அல்லது துறைமுகத்தில் இருந்து புறப்படுபவர்கள் 60 டொலர் விலகல் வரி செலுத்த வேண்டும் என ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
அதாவது, புதிய அரசாங்கம் நாட்டை விட்டு வெளியேறும் மக்களுக்கு புதிய வரிகளை விதிக்கவில்லை என தெரிவித்துள்ளார். மேலும், இந்த விலகல் வரியானது பழையது எனவும் இது பயணிகளின் விமான டிக்கெட்டில் உள்ளடங்கிய கட்டணமாகும் எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
செலுத்த வேண்டிய விலகல் வரி தொடர்பான புதிய வர்த்தமானி அறிவித்தல் அண்மையில் வெளியிடப்பட்டது.
இதனடிப்படையில், மத்தள விமான நிலையத்தின் ஊடாக புறப்படும் பயணிகளுக்கு குறித்த வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්