உள்நாடு

நாளை நடைபெறவுள்ள A\L பரீட்சை தொடர்பான தகவல்

(UTV | கொழும்பு) – நாளை நடைபெறவுள்ள A\L பரீட்சை தொடர்பான தகவல்

நாளை நடைபெறவுள்ள கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நடத்துவது தொடர்பான அனைத்து அடிப்படை நடவடிக்கைகளும் தற்போது திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு பரீட்சை நிலையங்களை தயார்படுத்தும் பணிகள் இன்று (22) இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

2022 – 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நாளை (23) முதல் 2,200 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெற உள்ளது. 331,709 பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரர்கள் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதோடு, பெப்ரவரி 17ஆம் திகதி வரை பரீட்சைகள் நடைபெறவுள்ளது

மேலும், பரீட்சை நிலையங்களின் பாதுகாப்பிற்காக விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top