மைத்திரியின் மேன்முறையீட்டு மனுவை விசாரிக்க கோரிக்கை

மைத்திரியின் மேன்முறையீட்டு மனுவை விசாரிக்க கோரிக்கை

(UTV | கொழும்பு) – மைத்திரியின் மேன்முறையீட்டு மனுவை விசாரிக்க கோரிக்கை

முன்னாள் ஜானாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுக்கத் தவறியமைக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தனிப்பட்ட வழக்கை சவாலுக்குட்படுத்தி அவர் தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனுவை விசாரிப்பதற்காக முழுமையான நீதிபதிகள் குழாமை நியமிக்குமாறு மனுதாரரான அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ நேற்று(23) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கோரிக்கையொன்றை விடுத்திருந்தார்.

இவ்வாறு, அருட்தந்தை சார்பில் நீதிமன்றில் முன்னிலையான சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி ரியென்சி அர்சகுலரத்ன ஊடாக இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

(2019 ஏப்ரல் 21ஆம் திகதி கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் தமது காலொன்றை இழந்த நபர் ஒருவர் மற்றும் மனுதாரரான அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ ஆகியோரினால் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் குறித்த தனிப்பட்ட வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.)

மேலும், அதன்படி முன்வைக்கப்பட்ட இந்த கோரிக்கை தொடர்பான நீதிமன்றத்தின் உத்தரவு நாளை மறுதினம்(26) வழங்கப்படும் என சோபித்த ராஜகருணா மற்றும் தம்மிக்க கனேபொல ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் நேற்று(23) அறிவித்திருந்தது.

இதனை தொடர்ந்து, மனுதாரரின் இந்த கோரிக்கைக்கு தாம் எதிர்ப்பு தெரிவிப்பதாக மைத்ரிபால சிறிசேன சார்பில் முன்னிலையான சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா நீதிமன்றுக்கு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

COMMENTS

Wordpress (0)
Disqus ( )