உள்நாடு

அவர் தமது சொந்த வேலையைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க வேண்டும்

(UTV | கொழும்பு) –    அவர் தமது சொந்த வேலையைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க வேண்டும்

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்படுபவர்கள், பொதுப்பயன்பாடுகள் சட்டம் மற்றும் மின்சார சபை சட்டத்தை படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஆணைக்குழுவின் இரண்டு உறுப்பினர்கள் பிரதித் தலைவர் உதேனி விக்கிரமசிங்க மற்றும் மொஹான் சமரநாயக்க ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை பதவியை இராஜினாமா செய்திருந்தனர்.,
இதமையடுத்து, நேற்றைய தினம் (05) டக்ளஸ் என்.நாணயக்கார ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

இந்தநிலையில் ஆணைக்குழு தலைவரின் தன்னிச்சையான நடவடிக்கை மற்றும் அவரது தொழில் ரீதியற்ற தன்மை காரணமாகவே குழுவின் உறுப்பினர்கள் பதவி விலகியதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

ஆணைக்குழு உறுப்பினர்கள் பொதுவாக ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற அரசியலமைப்பு பேரவையின் பரிந்துரைகளின் அடிப்படையில் நியமிக்கப்படுவதாகவும்,

ஆணைக்குழு உறுப்பினர்களின் நியமனம் மற்றும் பதவி விலகல் குறித்து பொறுப்பான அமைச்சர் முடிவெடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் மின்சக்தி அமைச்சருக்கு இந்த விவகாரம் குறித்து விவாதிக்க அதிகாரம் இல்லை, ஏனெனில் ஆணைக்குழு அவரது அமைச்சகத்தின் கீழ் உள்ள நிறுவனம் இல்லை என்றும்
எனவே, அவர் தமது சொந்த வேலையைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க வேண்டும் என்றும் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top