இரண்டு நீதியரசர்கள் மற்றும் நீதி மன்றத்தலைவர் இன்று சத்தியப்பிரமாணம்

இரண்டு நீதியரசர்கள் மற்றும் நீதி மன்றத்தலைவர் இன்று சத்தியப்பிரமாணம்

(UTV | கொழும்பு) –  உயர் நீதிமன்ற நீதியரசர், மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஆகியோர் ஜனாதிபதி முன்னிலையில் இன்று சத்தியப்பிரமாணம்

⚪ மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் , நீதியரசர் கே.பி பெர்னாண்டோ, உயர் நீதிமன்ற நீதியரசராகவும்,

⚪ மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் நிஸ்ஸங்க பந்துல கருணாரட்ன மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராகவும்

⚪ மேல் நீதிமன்ற நீதிபதி எம்.ஏ.ஆர் மரிக்கார் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராகவும்

இன்று (06) காலை கொழும்பு, கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, முப்படைத் தளபதிகள் உள்ளிட்ட பல அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

COMMENTS

Wordpress (0)
Disqus ( )