குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதில் அரசாங்கம் அலட்சியம்

குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதில் அரசாங்கம் அலட்சியம்

(UTV | கொழும்பு) –  குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதில் அரசாங்கம் அலட்சியம்

(midwife )குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதில் அரசாங்கம் மேலும் காலதாமதம் செய்து வருவதாக குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களின் சங்கத்தின் தலைவர் தேவிகா கொடிதுவாக்கு தெரிவித்துள்ளார்.

குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பதற்காக அரசாங்கம் அதிகளவு பணம் செலவிட்ட போதிலும், இதுவரையில் ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படாதது வீண் விரயமாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,,,

தற்போது சுமார் 2000 குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதாகவும்

இதன் காரணமாக தாய் சேய் நல சேவைகள் வீழ்ச்சியடையும் அபாயம் காணப்படுவதாக அரச குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களின் ஒன்றியம் எச்சரித்துள்ளது

3000 பெண் உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கிய போதிலும்,
கடந்த வருடம் முதல் ஆயிரம் பெண் உத்தியோகத்தர்களே ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், 60 வயதைத் தொடும் ஏராளமான குடும்ப நலப் பணியாளர்களும்,
61 முதல் 64 வயதுக்குட்பட்ட குடும்ப நலச் சேவை அலுவலர்களும் கடந்த ஆண்டு டிசம்பரில் ஓய்வு பெற்றுள்ளனர்.

குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் ஓய்வு பெறுவதால் தாய் மற்றும் குழந்தை சுகாதார சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலைமையால் தாய், சேய் சுகாதார சேவைகள் வீழ்ச்சியடைவதை தடுக்கும் திட்டம் எதுவும் சுகாதார அமைச்சிடம் இல்லை எனவும் தேவிகா கொடிதுவாக்கு சுட்டிக்க்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

COMMENTS

Wordpress (0)
Disqus ( )