உள்நாடு

 அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன விவாதம் எதிர் வரும் 9,10 ஆம் திகதிகளில்..

(UTV | கொழும்பு) –  அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன விவாதம் எதிர் வரும் 9,10 ஆம் திகதிகளில்..

ஜனாதிபதியினால் நாளை (08) முன்வைக்கவிருக்கும் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தை 9 ஆம் திகதி வியாழக்கிழமை மற்றும் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 9 ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடறவிருப்பதுடன்,
நலன்புரி அனுகூலங்கள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதி மற்றும் பல்வேறு அரசாங்க நிறுவனங்களின் வருடாந்த அறிக்கைகள் தொடர்பாக கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் முன்னர் சமர்ப்பிக்கப்பட்டிருந்த 51 பிரேரணைகளை அனுமதிக்காக சமர்ப்பிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அரசாங்கத்தின் கொள்கை அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தை மறுநாள் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 9.30 மணி முதல் பி.ப 5 மணி வரை இரண்டாவது நாளாகவும் நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டதாக செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top