விளையாட்டு

டெஸ்ட் போட்டித் தொடரை பாகிஸ்தான் அணி கைப்பற்றியது

(UDHAYAM, COLOMBO) – சுற்றுலா பாகிஸ்தான் அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டித் தொடரை பாகிஸ்தான் அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றியது.

நேற்று நிறைவுக்கு வந்த மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 101 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றதனை அடுத்து தொடர் பாகிஸ்தான் வசமானது.

போட்டியின் இறுதி நாள் ஆட்டம் நேற்று இடம்பெற்ற நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணி 304 என்ற வெற்றி இலக்கை நோக்கி தமது இரண்டாவது இனிங்சை ஆரம்பித்தது.

எனினும் 202 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து தோல்வியை தழுவியது.

முன்னதாக பாகிஸ்தான் தமது முதலாது இனிங்சில் 376 ஓட்டங்களையும் மேற்கிந்திய தீவுகள் அணி தமது முதலாவது இனிங்சிற்காக 247 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டன.

பாகிஸ்தான் அணி தமது இரண்டாவது இனிங்சில் 8 விக்கட்டுகளை இழந்த நிலையில் 174 ஓட்டங்களை பெற்றிருந்த

வேளை ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top