புத்தாண்டை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

புத்தாண்டை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்களின்  விலை குறைப்பு

(UTV | கொழும்பு) –  சிங்கள தமிழ் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பிற இறக்குமதி பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதற்கமைய ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு காரணமாக கடந்த சில தினங்களாக அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் குறைக்கப்பட்டிருந்ததாக குறிப்பிட்ட அமைச்சர் ,

இங்குள்ள பெரும்பாலான மக்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களையே உட்கொள்கின்றனர் என சுட்டிக்காட்டினார்.

இதன்படி உருளைக்கிழங்கு, வெங்காயம், சீனி, பருப்பு மற்றும் மிளகாய் போன்ற நுகர்வோர் பொருட்கள் நேரடியாக நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படுவதாக குறிப்பிட்டார்.

மேலும் டாலருடன் பரிவர்த்தனை செய்து இறக்குமதி செய்யப்படும் மற்ற அனைத்து முக்கிய அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் விரைவில் குறையும் என்றும் அவர் தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

COMMENTS

Wordpress (0)
Disqus ( )