(UTV | கொழும்பு) – இலங்கை-இந்திய கப்பல் சேவை ஜூன் மாதம் முதல்…
சென்னை துறைமுகத்திலிருந்து கப்பல் இயக்குவது தொடர்பாக கார்டிலியா என்ற நிறுவனத்திற்கு அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த நிறுவனத்தின் எம்பிரஸ் என்ற பயணியர் கப்பல், சென்னையிலிருந்து எதிர்வரும் ஜூன் 5ஆம் திகதி முதல், இலங்கைக்கான பயண சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கப்பலானது யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டை, திருகோணமலை, காங்கேசன்துறை, , கொழும்பு உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லவிருக்கிறது.
3 நாள் பக்கேஜில் பயணிக்க, தம்பதிக்கு 85 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படவுள்ளதாகவும்,
சென்னையிலிருந்து 24 மணி நேரத்திற்குள், இந்தப் கப்பல் இலங்கையின் பல்வேறு துறைமுகங்களுக்கு சென்று வரவுள்ளது.
சென்னை துறைமுகத்தின் 7ஆவது நுழைவாயில் வழியாக, பயணியர் அனுமதிக்கப்பட உள்ளனர்.
மேலும், இந்த கப்பலில், ஒரே நேரத்தில் 1, 600 பேர் வரை பயணிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්