மாட்டிறைச்சி சாப்பிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

மாட்டிறைச்சி சாப்பிடுவதற்கு தடை  விதிக்கப்பட்டுள்ளது

(UTV | கொழும்பு) – மாட்டிறைச்சிகள்  சாப்பிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

வடமேல் மாகாணத்தில் உள்ள கால்நடைகளுக்கு வைரஸ் நோய் பரவி வருவதால், அந்த பகுதிகளில் விற்பனை செய்யப்படும் மாட்டிறைச்சியை உட்கொள்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் அறிவித்துள்ளது.

வடமேல் மாகாணத்தில் கால்நடைகளுக்கு ‘லம்பி ஸ்கின் நோய்’ எனப்படும் தொற்று நோய் பரவுவதை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மறு அறிவித்தல் வரை வடமேல் மாகாணத்திலிருந்து கால்நடைகளை வெளியிடங்களுக்கு கொண்டு செல்வதையும் வெளியிடங்களில் இருந்து வடமேல் மாகாணத்திற்கு கொண்டு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கிளிநொச்சியிலும் இவ்வாறு கால்நடைகளுக்கு குறித்த தோல் நோய் பரவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

COMMENTS

Wordpress (0)
Disqus ( )