கிசு கிசு

5 வருடங்கள் சிறைத்தண்டனை என விஜய்க்கு எச்சரிக்கை!

(UTV | கொழும்பு) –

நடிகர் விஜய் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து வருகின்றார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இத்திரைப்படத்தில், கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த், சஞ்சய் தத் உட்பட பலர் நடிக்கின்றனர்.

இந்த திரைப்படம், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் திரைக்கு வரவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், லியோ திரைப்படத்தின் முதலாவது பாடல் எதிர்வரும் 22ஆம் திகதி வெளியாகும் என புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அண்மையில் படக்குழு அறிவித்தது.

அந்த புகைப்படத்தில் நடிகர் விஜய் சிகரெட் புகைப்பது போல சித்தரிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பசுமை தாயகம் அமைப்பு, அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், சிகரெட் நிறுவனங்கள் அவர்களின் வாடிக்கையாளர்களையே கொலை செய்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், விளம்பரங்களிலும், சுவரொட்டிகளிலும் கதாநாயகன் புகைபிடிக்கும் காட்சிகளை விளம்பரம் செய்கின்றனர். இவ்வாறு விளம்பரம் செய்வது COTPA 2003 இந்திய புகையிலை கட்டுப்பாட்டு சட்டத்தின் படி குற்றம் என்று தெரிந்தே, இந்த விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன. இந்த குற்றத்திற்கு 5 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top