உலகம்

10 வினாடிகளுக்கு குறைவாகவே பாலியல் தொல்லை – இது குற்றமில்லையெ நீதிமன்றம் தீர்ப்பு

(UTV | கொழும்பு) –

மாணவியின் சம்மதம் இன்றி அவரை சீண்டியது உண்மைதான் என்று ஒப்புக்கொண்ட காவலாளி, ஆனால் வேடிக்கைக்காகத்தான் அப்படி செய்தேன் என்று வெகுஇயல்பாக கூறி உள்ளார்.

இத்தாலியின் ரோம் நகரில் உள்ள ஒரு பள்ளியில் படித்துவந்த 17 வயது இளம்பெண், 2022 ஏப்ரல் மாதத்தில் ஒருநாள் வழக்கம்போல் பள்ளிக்கு சென்று உள்ளார்.தனது வகுப்பறைக்கு மாடிப் படிக்கட்டில் அவர் ஏறிச் சென்று கொண்டிருந்தபோது, திடீரென யாரோ தன்னை பின்பக்கமாக தொடுவது போலவும், தனது கீழாடையை கழற்றுவது போலவும் மாணவி உணர்ந்தார். உடனே அதிர்ச்சியுடன் அவர் திரும்பி பார்த்தபோது, அவரை பார்த்து சிரித்த பள்ளியின் காவலாளி, “அன்பே, விளையாட்டுக்காக இப்படி செய்கிறேன் என்று உனக்கு தெரியும்” என்றுக் கூறி அசடு வழிந்ந்து உள்ளார்.

காவலாளியின் இந்த பேச்சை கேட்டு கோபமடைந்த மாணவி, பள்ளி நிர்வாகியான அன்டோனியோ அவோலா என்பவரிடம் புகார் அளித்தார். மாணவியின் சம்மதம் இன்றி அவரை தான் சீண்டியது உண்மைதான் என்று ஒப்புக்கொண்ட காவலாளி, ஆனால் வேடிக்கைக்காகதான் அப்படி செய்தேன் என்று வெகுஇயல்பாக கூறி உள்ளார்.

பள்ளி மாணவியை காவலாளி சீண்டிய விவகாரம், நீதிமன்றம் வரை சென்றது. மாணவியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய காவலாளிக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்க வேண்டும் என்று இவ்வழக்கு விசாரணையின்போது மாணவி தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். ஆனால், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த காவலாளியை சில தினங்களுக்கு முன் விடுவித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

“மாணவியை காவலாளி 10 வினாடிகளுக்கு குறைவாகவே பாலியல் ரீதியாக சீண்டி உள்ளார். அதை குற்றமாக கருத முடியாது” என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தனர். நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு இத்தாலி மக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை விமர்சித்து ‘கொஞ்ச நேரம் தொடுதல்’ என்ற தலைப்பில் டிக்டாக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தங்களின் ஆதங்கங்களை பொதுமக்கள் கொட்டித் தீர்த்து வருகின்றனர்.

இந்த் தீர்ப்பு குறித்து மாணவி கூறும் போது இந்த விஷயத்தில் பள்ளி நிர்வாகமும், நீதிமன்றமும் தமக்கு அநீதி இழைத்துவிட்டதாக கருதுவதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.”இந்த வழக்கில் உரிய நீதி வழங்கப்படவில்லை. இதன் மூலம், நாட்டின் நீதி பரிபாலன முறையை நம்பியது தவறு என்பதை உணர தொடங்கி இருக்கிறேன்” என்றும் மாணவி கூறியுள்ளார்.

மேலும் “சத்தம் போடாமல் என் அருகில் வந்து பின்புறமாக என்னை தொட்ட காவலாளி, எனது கீழாடையை இழுத்துவிட்டு, என்னை இறுக பற்றித் தூக்கி, அந்தரங்க உறுப்புகளை தொட்டுத் துன்புறுத்தி உள்ளார். இது ஒன்றும் வேடிக்கையான விஷயம் அல்ல. வயதான ஒருவர் ஒரு இளம்பெண்ணிடம் இப்படியெல்லாம் விளையாடக் கூடாது” என கூறி உள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top