06ஆவது நூலை வெளியிட்ட இம்தியாஸ் பாக்கீர் மார்கார்

06ஆவது நூலை வெளியிட்ட இம்தியாஸ் பாக்கீர் மார்கார்

(UTV | கொழும்பு) –  முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பிணருமான சட்டத்தரனியுமான  இம்தியாஸ் பாக்கீர் மார்கார் எழுதிய ”சிந்திப்போம்” சித்துன எனும் சிங்கள மொழிமூலமான நுால் வெளியீட்டு வைபவம் நேற்று (10) கொழும்பு 7 ல் உள்ள இலங்கை மன்றக் கல்லுாாியின் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வுக்கு பிரதம மந்திரி தினேஸ் குணவர்த்தன, பாராளுமன்றத்தின்  சபாநாயகர் மகிந்த யாப்பா ஆபேவர்த்தன, எதிர்கட்சிச் தலைவர் சஜித் பிரேமதாச,  மற்றும் சர்வமதத் தலைவர்கள், பாரளுமன்ற உறுப்பிணர்கள், முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாககாரின் ,நண்பர்கள் பேருவளைத் தொகுதி ஆதரவாளர்கள், குடும்ப உறுப்பிணர்கள், என நானுற்றுக்கும் மேற்பட்டோர்கள் மண்டபம் நிறைந்து காணப்பட்டனர்

இந் நுால் பற்றிய விமர்சன உரைகளை பல்கலைக்கழக விரிவுரையாளர்  கலாநிதி அத்துலசிறி சமரக்கோன், சிரச சிரேஸ்ட ஊடகவியலாளர் சந்தன சூரியபண்டார, இளம் ஊடகவியலாளர் ஹரிந்து உடுவரகெதர,  ஆகியோர்களும் இம்தியாஸ் பற்றியும் அவரது நுால் பந்திகள் பறறி உரையாற்றினார்கள்.

இந் நிகழ்வில் உரையாற்றிய நுாலசிரியர்  இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்

கடந்த ஜந்து வருடகாலமாக இலங்கையில் வெளிவரும் தேசிய சிங்களப் பத்திரிகைகள், இன ஜக்கியம், ஏனைய நாடுகளுடன்  இலங்கை ஒப்பீடுகள்,  இலங்கையை நாம் முன்னேற்றுவோம். இளம் சந்ததிகள், நாளைய தலைவர்கள்  போன்ற பல்வேறு நற் சிந்தனை , தேசிய நல்லிணக்கம் பற்றிய  கட்டுரைகளை சிங்கள பத்திரிகைகளில்  தொகுத்து இந் நுாலை வெளியிட்டுள்ளேன்.

இந் நுால்களை 50 வீதக் கழிவில்  கொடகே நிறுவனர் பதித்து தந்துள்ளார். அவருக்கு நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.  இந் நுாலை விட மேலும் ஓர் நுால்  எழுதுவதாகவும் அதில்  தனது அரசியல்ப் பயணம், மற்றும் ,பாடசாலை நினைவுகள் , பல்கலைக்கழகம், வாழ்க்கை  சட்டக் கல்லுாாி அரசியல் நண்பர்கள் அனுபவங்களைக் கொண்டு  எழுதுவதாகவும் அவை அடுத்த மாத மளவில் வெளியிடவும் என்னியுள்ளதாகவும் ஏற்கனவே ஜந்து நுால்கள் வெளியிட்டதாகவும் இம்தியாஸ் அங்கு உரையாற்றினார். அத்துடன்  தமிழ்  முஸ்லிம் நண்பர்கள் ஆதரவாலளர்களுக்காக எனது நுாலை  தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுவதற்கும் முயற்சி செய்வதாகவும் அவர்  கூறினார்.

(அஷ்ரப் ஏ சமத்)

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

COMMENTS

Wordpress (0)
Disqus ( )