ஓய்வு பெறும் – இலங்கை அணி வீரர்!

ஓய்வு பெறும் – இலங்கை அணி வீரர்!

(UTV | கொழும்பு) –

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க தீர்மானித்துள்ளார். வனிந்து தனது தீர்மானத்தை இலங்கை கிரிக்கெட் சபைக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக கிரிக்கெட் சபை உறுதிப்படுத்தியுள்ளது. மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் போட்டிகளில் அதிக கவனம் செலுத்தும் நோக்கில் தான் அந்த முடிவை எடுத்ததாக வனிந்து குறித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

வனிந்து ஹசரங்க டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் போது 4 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளதோடு துடுப்பாட்ட வீரராக 196 ஓட்டங்களையும் பெற்றிருந்தம்மை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

COMMENTS

Wordpress (0)
Disqus ( )