கட்டார் தேசிய கிரிக்கெட் அணிக்குத் தெரிவான கல்முனையைச் சேர்ந்த அஹ்னாப்!

(UTV | கொழும்பு) –
சிறு வயது முதல் கிரிக்கெட்டில் அலாதி பிரியம் கொண்டு பல்துறைகளிலும் திறமையை பறக்க விட்ட, கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயம் மற்றும் கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவனும், கல்முனை Legends கழகத்தின் சொலிட் வெபன் (Solid Weapon) என்று அழைக்கப்படும் முஹம்மட் அஹ்னாப் கட்டார் தேசிய கிரிக்கெட் அணிக்காக விளையாட தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

உள்ளூரில் இவரது கிரிக்கெட் பயணம் கல்முனை லெஜெண்ட்ஸ் அணியில் தொடங்கியதுடன், Legends அணியின் பல்வேறு வெற்றிக்கு அடித்தளமிட்ட சிறந்த வீரராக இருந்தவர்.
இவரது கிரிக்கெட் விளையாட்டு மாவட்ட, மாகாண மட்டங்கள் மற்றும் தேசியத்தெரிவுகளில் முதன்மை காட்டி, கொழும்பு சாஹிரா கல்லூரி, கொழும்பு MOORS அணி, மத்திய கிழக்கில் Qatar United Challengers அணி என கட்டார் (QATAR) உள்ளகப் போட்டிகளில் பல திறமைகளைக்காட்டிய சிறந்த கிரிக்கெட் வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தேசியத்தில் கண்ட கனவை சர்வதேசத்தில் நனவாக்கி, கட்டார் தேசிய அணிக்காகத் தெரிவு செய்யப்பட்டிருக்கின்ற லெஜெண்ட்ஸ் விளையாட்டுக் கழகத்தின் SOLID WEAPON முஹம்மட் அஹ்னாபின் எதிர்காலம் சிறப்பாக அமைந்து, இன்னும் பல சாதனைகள் புரிந்திடவும் லெஜெண்ட்ஸ் விளையாட்டுக் கழகத்தினர் பிரார்த்திக்கின்றனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *