விளையாட்டு

உலக கிண்ணத்தை பெற்றுக்கொடுத்த ஸ்பெயின் அணியின் தலைவிக்கு நேர்ந்த சோகம்!

(UTV | கொழும்பு) –

உலககிண்ண இறுதிப்போட்டியில் தனது அணிக்காக கோல் அடித்த ஸ்பெயின் அணியின் தலைவியிடம் அவரது தந்தை உயிரிழந்த தகவல் போட்டி முடிவடைந்த பின்னரே தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இறுதிப்போட்டியில் ஸ்பெயின் இங்கிலாந்து அணியை தோற்கடித்த – வெற்றிக்கு காரணமான அந்த ஒரு கோலை அணித்தலைவி ஒல்கா கார்மொனா அடித்தார். இந்த நிலையில் நோய்காரணமாக நீண்டகாலமாக போராடிக்கொண்டிருந்த அவரின் தந்தை உயிரிழந்துள்ளார்.

நீங்கள் அந்த இரவு என்னை பார்த்துக்கொண்டிருந்தீர்கள் என்பது எனக்கு தெரியும் நீங்கள் என்னை பற்றி பெருமைப்பட்டிருப்பீர்கள் என அவர் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். இந்த செய்தியுடன் தனது வெற்றிபதக்கத்தை முத்தமிடும் படத்தையும் அவர் இணைத்துள்ளார். ஒல்கா கார்மொனாவின் தந்தையின் இறப்பு குறித்து அறிவித்துள்ள ஸ்பானிஸ் கால்பந்தாட்ட சங்கம் இறுதிப்போட்டிக்கு பின்னரே அவருக்கு இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளது.

இந்த கடும் துயரமான தருணத்தில் நாங்;கள் எங்களது அனுதாபத்தை அவரது குடும்பத்தினருக்கும் அவருக்கும் தெரிவித்துக்கொள்கின்றேன் என தெரிவித்துள்ள ஸ்பானிஸ் கால்பந்தாட்ட அமைப்பு நாங்கள் ஒல்காவை நேசிக்கின்றோம் நீங்கள் எங்கள் வரலாறு எனவும் குறிப்பிட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top