சந்திராயன் 03க்கு குவியும் வாழ்த்து

(UTV | கொழும்பு) –

சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக சந்திரனில் தரையிறக்கிய இந்திய அரசாங்கத்திற்கு வாழ்த்து தெரிவிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (24) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

சந்திரயான்-3 விண்கலத்தை இந்தியா வெற்றிகரமாக தரையிறக்கியுள்ளது. ஜூலை 14 ஆம் திகதி விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-3, தனது பயணத்தை முடித்துக்கொண்டு நிலவின் தென் துருவத்தை அடைந்துள்ளது. இதுவரை இவ்வாறு வெற்றிகரமாக விண்கலத்தை சந்திரனின் தென் துருவத்தில் தரையிறக்கிய ஒரே நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தியாவின் சந்திராயன்-3 விண்கலம் மூலம் கொண்டுச் செல்லப்பட்ட விக்ரம் லேண்டர் சந்திரனில் தரையிறங்கியுள்ளது. இதன்படி, சந்திரனின் தென்துருவத்தில் விண்கலத்தை இறக்கிய முதலாவது நாடாக இந்தியா வரலாறு படைத்துள்ளது. அங்கு ரோவர் ஊடாக ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

தெற்காசியாவில் உள்ள நாடு இவ்வாறான பணியை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காக இந்திய அரசாங்கத்திற்கும், இந்திய மக்களுக்கும் நாங்கள் எங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.

இதேவேளை, சபை முதல்வரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த குறிப்பிடுகையில், 

எமது அண்டை நாடான இந்தியா சந்திரயான் 3 விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கியுள்ளமையை பாராட்டுகிறேன். இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் சிறந்த விஞ்ஞானி, 2020 க்கு என அவருக்கு ஒரு இலக்கு இருந்தது. அவரின் கனவுதான் இன்று நிஜமாகி இருக்கிறது. எனவே, எந்த வேலைத்திட்டத்துக்கு இலக்கு இருக்கவேண்டும் என்பது இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும் என்றார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *