ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்றுத் தீர்ந்த கிரிக்கெட் நுழைவுச் சீட்டுகள்!

(UTV | கொழும்பு) –

எதிர்வரும் சனிக்கிழமை (02) கண்டி பல்லேகல மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஆசிய கிண்ண போட்டிக்கான நுழைவுச் சீட்டுகளின் விலை 96,000 ரூபாயாக உயர்வடைந்துள்ளது. பிரதான மைதானத்தின் மேல் தளத்தில் உள்ள இருக்கைக்களுக்காகவே இந்த அளவில் கட்டணம் அறவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

எவ்வாறாயினும் நாளை மறுதினம் (31) நடைபெறவுள்ள இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டிக்கான நுழைவுச் சீட்டு விலைகள் அவ்வளவு உயர்வாக நிர்ணயிக்கப்படவில்லை.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் போட்டிக்கான நுழைவுச் சீட்டின் விலை ரூ.1600, ரூ.6400 மற்றும் ரூ.11,200 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பல்லேகல மைதானத்தில் போட்டிகளை காணக்கூடிய பார்வையாளர்களின் எண்ணிக்கை 25,000 ஐ என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில், 6,000 பார்வையாளர்களுக்கு மட்டுமே இருக்கை வசதி உள்ளது.

மேலும் 15,000 முதல் 16,000 பார்வையாளர்கள், இருக்கை வசதிகள் இல்லாத பிரதான ஓட்ட எண்ணிக்கை பதாதை அருகிலும், எதிரே அமைந்துள்ள புல் மைதானத்தில் போட்டிகளைப் பார்க்க முடியும்.மேல் தளத்தில் ஆசனம் ஒன்றின் விலை 96,000 ரூபா எனவும் பிரதான விளையாட்டு மண்டபத்தில் இவ்வாறான 1000 ஆசனங்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.மேலும், பிரதான விளையாட்டு அரங்கின் கீழ் தளத்தில் ஒரு இருக்கையின் விலை 40,000 ரூபாவாகும், அத்தகைய இருக்கைகள் 5000 உள்ளன.

ஆசன வசதியோ அல்லது கூரை பாதுகாப்போ இல்லாமல், புல் மீது அமர்ந்து அல்லது நின்றபடி போட்டியைக் காண ஒரு நுழைவுச் சீட்டின் விலை 9,600 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டிக்கான ரூ.96,000 விலையில் இருந்த 1,000 நுழைவுச் சீட்டுகளில் நேற்று (27) மாலை வரை விற்கப்பட்ட நிலையில், 58 நுழைவுச் சீட்டுகள் மட்டுமே எஞ்சியுள்ளன.

40,000 ரூபாய் விலையுள்ள 5,000 நுழைவுச் சீட்டுகளில், 1,029 நுழைவுச் சீட்டுகள் மீதமுள்ளன.கிட்டத்தட்ட 16,000 புல் மைதான நுழைவுச் சீட்டுகளில் 11,600 மீதம் உள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் நுழைவுச் சீட்டுகளை விற்பதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ இணையதளம் தெரிவித்துள்ளது.இந்த நுழைவுச் சீட்டுகள் அனைத்தும் இணையத்தள பதிவின் ஊடாக விற்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், மைதானத்தின் நுழைவாயிலில் போட்டி ரசிகர்களை சோதனையிட பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு பிரசன்னமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *