உள்நாடு

மலையக மக்களுக்கு நற்செய்தி – புதிதாக ஆரம்பிக்கப்படும் காப்புறுதி திட்டம்.

(UTV | கொழும்பு) –

நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வதிகள் அபிவிருத்தி அமைச்சின் ஊடாக, பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம், இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் என்பன இணைந்து பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான முன்னோடி காப்புறுதி திட்டமான “SLIC ஜீவன சக்தி” அறிமுகபடுத்தி வைக்கப்பட்டது.
இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் இதற்கான நிகழ்வு இன்று ஹில்டன் கிரேன்டில் நடைபெற்றது.

“SLIC ஜீவன சக்தி” என்பது பெருந்தோட்ட தொழிலாளர்களின் நல்வாழ்வுக்கு முக்கியத்துவம் – முன்னுரிமை வழங்கும் வகையில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஆயுள் மற்றும் சுகாதார காப்புறுதி திட்டமாகும். பெருந்தோட்டதுறையில் தொழில்நேரத்தில் இடம்பெறும் விபத்துகள் மற்றும் மரணங்களை கருத்திற்கொண்டு, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் நலன்கருதி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஆலோசனைக்கமையவே இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பெருந்தோட்ட தொழிலாளருக்கும், அவரின் துணை மற்றும் இரு பிள்ளைகளுக்கு இத்திட்டம் செல்லுபடியாகும்.

காப்புறுதி காலத்தில் இறப்பு ஏற்பட்டால் 3 லட்சம் ரூபா நிதி வழங்கப்படும். 23 வகையான நோய்களுக்கு காப்புறுதி வழங்கப்படுகின்றது. குளவிக்கொட்டு உள்ளிட்ட விடயங்களால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டால் – அங்கு தங்கி இருந்து சிகிச்சைபெற்றால் நாளொன்றுக்கு 500 ரூபா வீதம் வழங்கப்படும். இதர கொடுப்பனவும் வழங்கப்படும். இந்த காப்புறுதி திட்டத்துக்காக தொழிலாளர் ஒருவர் மாதம் 99 ரூபா செலுத்த வேண்டும். ஆறு மாதம் அல்லது ஒரு வருடகாலப்பகுதியில் நிதி அறவிடப்படும். தொழிலாளர்களை பாதுகாக்கவும், தொழிலாளர்கள் ஏனையோரை தங்கியிருக்கும் நிலையை நிவர்த்தி செய்வது திட்டத்தின் மற்றுமொரு நோக்கமாகும். தோட்டத் தொழிலாளர்கள் மட்டுமல்ல தோட்டத்தில் உள்ளவர்கள் மற்றும் தோட்ட அதிகாரிகளும் இந்த காப்புறுதி திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். 99 ரூபாதான் ஆரம்பம், பொருளாதார தேவைக்கேற்ப காப்புறுதி திட்டத்தை மாற்றிக்கொள்ளலாம். தோட்டத் தொழிலாளர் ஒருவர் தமக்கான பாதுகாப்புக்கு நாளொன்றுக்கு 3 ரூபாவையே ஒதுக்க வேண்டும், எனவே, இத்திட்டம் வெற்றிகரமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

இந் நிகழ்வில் பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண, தொழில் அமைச்சர் மனுச நாணயக்கார, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ராமேஷ்வரன், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி, இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி, நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் எஸ்.சமரதிவாகர மற்றும் மேலதிக செயலாளர்கள், அதிகாரிகள், தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் உட்பட அதிகாரிகள், வீரசேகரி ஊடக குழுமத்தின் பணிப்பாளர் குமார் நடேசன், பெருந்தோட்ட கம்பனிகளுடைய முகாமைத்துவ பணிப்பாளர்கள், பிரதம நிறைவேற்று அதிகாரிகள், முகாமைத்துவ மேலாளர்கள், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் அதிகாரிகள் உட்பட பலர் முக்கியஸ்தர்கள் கலந்துக் கொண்டனர்.

     

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top