போராட்டம் செய்தால் கொலை அச்சுறுத்தல் – தாயொருவர் ஆதங்கம்.

போராட்டம் செய்தால் கொலை அச்சுறுத்தல் – தாயொருவர் ஆதங்கம்.

(UTV | கொழும்பு) –

போராட்டம் செய்தால் கொலை அச்சுறுத்தலுக்கும் முகம் கொடுக்கிறோம் என மது எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தாயொருவர் ஆதங்கம் வெளியிட்டுள்ளார். கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் அலுவலகம் அமைந்துள்ள பகுதிக்கு மிக அருகில் புதிதாக திறக்க திட்டமிடப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ள மதுபான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்களால் பூநகரி பிரதேச செயலாளருக்கு மகஜரும் கையளிக்கப்பட்டுள்ளது. புதிதாக திறக்க திட்டமிடப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ள குறித்த மதுபான நிலையத்தின் அனுமதியை இரத்து செய்யுமாறு மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த போராட்டத்தில் ஈடுபட்டமையால் மது விற்பனை நிலையத்தினரால் தமக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்ட தாயொருவர் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

COMMENTS

Wordpress (0)
Disqus ( )