ஶ்ரீ லங்கன் விமான சேவைகள் தாமதம்!

(UTV | கொழும்பு) –

ரீ லங்கன் விமான நிறுவனத்திற்கு சொந்தமான 2 விமானப் பயணங்கள் இன்று தாமதமாகின. அத்துடன், மற்றுமொரு விமானப் பயணத்தை இரத்துச் செய்ய வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. பங்களாதேஷ் தலைநகரான டாக்கா நோக்கி பயணிக்கவிருந்த UL 189 இலக்க விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக பயணத்தை ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டதாக ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இந்தியாவின் சென்னை நோக்கி பயணித்த UL 141 இலக்க விமானத்தை தரையிறக்குவதில் இன்று காலை தாமதம் ஏற்பட்டது. சென்னை விமான நிலையத்தின் ஓடுபாதையில் ஏற்பட்ட தாமதத்தின் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டதாக ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *