இஸ்ரேல் வசமான ஹமாஸின் இராணுவ மையம்!

(UTV | கொழும்பு) –

காசா முனைப்பகுதியில் உள்ள ஹமாஸ் போராளிகளின் இராணுவ மையத்தை இஸ்ரேலிய தரைப் படைகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளன. இது குறித்து இஸ்ரேலிய பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறியிருப்பதாவது: காசா நகரில் உள்ள ஹமாஸ் போராளிகளின் இராணுவ மையம் இஸ்ரேலிய படைகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கிருந்து டொங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், ஆயுதங்கள், புலனாய்வுக்கான உபகரணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன.

 

நஹல் படைப்பிரிவினர் வழங்கிய ஒத்துழைப்பையடுத்து 10 ஹமாஸ் போராளிகள் பதுங்கியிருந்த இடத்தை இஸ்ரேலிய போர் விமானங்கள் குண்டுவீசி அழித்தன.காசா நகரின் ஷெஜாயா பகுதியில் உள்ள அல்-குத்தூஸ்மருத்துவமனைக்கு அருகில் உள்ள கட்டிடத்தில் ஹமாஸ் போராளிகள் சிலர் பதுங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் இஸ்ரேலிய தரைப்படையைத் தாக்கலாம் என்பதால் வீரர்கள் மிக கவனமாக முன்னேறி வருகின்றனர்.

இந்நிலையில், ஹமாஸின் டெய்ர் அல்-பலாஹ் பட்டாலியன் கமாண்டர் அசெபா இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். போரை ஹமாஸ் போராளிகளே தொடங்கி வைத்தனர். அதில் வெல்ல வேண்டும் என்பதே எங்களின் தற்போதைய இலக்கு என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *