காஸா- இஸ்ரேல் மோதலை நிறுத்த கோரி கொழும்பு ஐ. நா காரியலயத்தில் மகஜர் கையளிப்பு!

(UTV | கொழும்பு) –

பலஸ்தீன, காஸாவில் மனிதாபிமானமாற்ற முறையில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் மனித படுகொலையையும், கொடுர தாக்குதல்களையும் உடனடியாக நிறுத்த ஐ.நா பாதுகாப்பு சபை தலையிட வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் 160 க்கு மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.

இதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் சட்டதரணி எச்.எம்.எம். ஹரீஸ், அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இசாக் ரஹ்மான் ஆகியோர் கையெழுத்துக்களை பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இஸ்ரேல், பலஸ்தீனத்தில் மனிதாபிமானமில்லாத வகையில் முன்னெடுத்து வரும் மனித படுகொலையையும், கொடுர தாக்குதல்களையும் உடனடியாக தடுத்து நிறுத்தி அமைதியையும், சமாதானத்தையும் நிலைநிறுத்த ஐ.நா பாதுகாப்பு சபை தலையிட வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தே இந்த மகஜர் தாயாரிக்கப்பட்டுள்ளது.

இதில் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிரிசேன, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உட்பட கட்சி தலைவர்கள், முன்னாள், இந்நாள் அமைச்சர்கள், சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் இன பேதங்களுக்கு அப்பால் கையெழுத்திட்டுள்ளனர். இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அதிகமானோர்களின் கையெழுத்துடன் தயாரிக்கப்பட்ட இந்த மகஜர் இன்று காலை 11.00 மணியளவில் கொழும்பில் அமைந்துள்ள ஐ. நா அலுவலகத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இசாக் ரஹ்மான் உட்பட பல எம்.பிக்களின் பிரசன்னத்துடன் ஐ. நா அலுவலகத்தில் வைத்து ஐ.நா அதிகாரிகளிடம் கையளிக்கப்படவுள்ளது.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *