“இளைஞர்களின் வெளிநாட்டு வாழ்க்கையில் விளையாடும் JVP”

நாட்டைக் காப்பாற்ற வருவோம் என்று தம்பட்டம் அடித்தவர்கள் அன்று 60,000 இளைஞர்களின் உயிர்களை பறித்தவர்கள். ஆனால் இன்று  இளைஞர்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்குச் செல்வதைத் தடுப்பதன் மூலம் அன்று செய்த தீங்குகளை மக்கள் விடுதலை முன்னணி இன்றும் செய்துவருகிறது என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

உமண்தாவ பௌத்த உலகளாவிய கிராமத்தில் வெள்ளிக்கிழமை (19) நடைபெற்ற இஸ்ரேலில் விவசாயத் துறையில் தொழில் வாய்ப்புகளுக்காகத் தெரிவு செய்யப்பட்ட இளைஞர்களுக்கான  முதலாவது வதிவிட பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார் .

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

இளைஞர்களுக்கான பயிற்சித் திட்டம் மூல்ம் இஸ்ரேலில் விவசாயத் துறையில் வேலை செய்பவர்களுக்கு விரிவான பயிற்சி மற்றும் மன உறுதியை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சவால்களை எதிர்கொண்டு தமது பணிகளை வெற்றிகரமாகச் செய்வதற்கும்  நாட்டிற்கு மீள வந்த பின்னர் தொழில்முனைவோராக வெற்றிபெறுவதற்குத் தேவையான பயிற்சிகள் இங்கு வழங்கப்படும்.

எங்களின் முதன்மை நோக்கம் விவசாய தொழில் மற்றும் நிர்மாணத்துறை பயிற்சி அளிப்பதன் மூலம் வாழ்க்கையை கற்பிப்பதாகும். நாட்டில் விவசாயத் தொழிலுக்கு பயிற்சி அளிக்க பல நிறுவனங்கள் உள்ளன. இருப்பினும்  நீங்கள் வாழ்க்கையைக் கற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள் எதுவும் இல்லை. மனிதவளத்தை  உருவாக்க வேண்டும் என்றால் அதற்கான ஒரே இடம் உமண்தாவ என்று முடிவு செய்தோம். தேவையான ஒழுக்கமான சூழலும் மனவலிமையை அளிக்கக்கூடிய சூழல்  இங்கு உள்ளது.

விவசாயத் தொழில் எப்படி நவீனப்படுத்தப்பட்டுள்ளது என்பதை இங்கு அனுபவபூர்வமாக காண முடிகிறது. பரந்து விரிந்த அறிவை இங்கு பெற்றுக்கொள்ள  முடியும். இஸ்ரேல் உட்பட பல நாடுகளுக்கு இளைஞர்களை அனுப்புகிறோம். இவர்கள் வெளிநாடு  சென்று திரும்பி வர வேண்டிய சூழலை உருவாக்க விரும்புகிறோம், பணத்தைப் மாத்திரம் தேட வல்ல , தோல்வியடையாது வாழ்க்கையை வெல்லும்  குழுவாக மாற்ற வேண்டும் என்பதற்காகவே இத்திட்டத்தை இன்று ஆரம்பிக்கொறோம்

இதுவே சமூக முன்னேற்றத்தின் ஆரம்பம். இந்த நாட்டை தொழிலதிபர்கள், இந்த மண்ணை நேசிக்கும் மக்கள் நிறைந்த நாடாக மாற்றும் வேலைத்திட்டத்தின் அழகுதான் இன்று இங்கு நடக்கிறது.

இந்த நாட்டில் இளைஞர்கள் மற்றும் கல்வி தொடர்பில் பாரிய பிரச்சினை உள்ளது. ஆனால் நாட்டில் கல்வி சிந்திக்கக்கூடியவர்களை உருவாக்கவில்லை. நமது கல்வி சிந்திக்க முடியாத சிலரை உருவாக்குகிறது, பின்னர் உயர்கல்வி மனப்பாடம் செய்யும் ஒரு குழுவை உருவாக்குகிறது.

மேலும், கற்பனையே இல்லாமல் வெறும் மிதக்கும் ஒரு சிலரை ஊடகங்கள் உருவாக்கும் போது, நம்மால் முடிந்தவரை மக்களை மாற்ற முயல்கிறோம். அதற்கிணங்க இந்த நாட்டை மாற்றியமைத்து கட்டியெழுப்பி  ஒரு தேசமாக நாம் வெற்றிப் பயணத்தை ஆரம்பிக்கின்றோம்

நாட்டுத் தொழிலாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பக் கூடாது என்று பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்படும் இவ்வேளை இதனை தேசியப் பொறுப்பாக கருதுகிறோம். அண்மைக் காலத்தில், 10 பில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டுத் தொழிலாளிகளால் அந்நிய செலாவணியாக  நாட்டிற்கு கொண்டு வர முடிந்தது.

நாட்டுக்கு தேவையான எண்ணெய் மற்றும் எரிவாயு கிடைப்பது கடினமாக இருந்தது. ஆனால் மற்றொரு குழு வெளிநாட்டு தொழிலாளர்ககளிடம் நாட்டுக்கு  பணம் அனுப்ப வேண்டாம் என்று கூறியது.  ஆனால் நாம் நாட்டின்  நிலைமையை மாற்றியுள்ளோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *