மோடியின் பதவிப்பிரமாணம் ஒத்திவைப்பு – வெளியான காரணம்

மோடியின் பதவிப்பிரமாணம் ஒத்திவைப்பு – வெளியான காரணம்

இந்தியாவின் அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடிதலைமையிலான அமைச்சரவையை நியமிப்பதில் பல்வேறுப்பட்ட நெருக்கடிகள் தோன்றியுள்ளன.

இந்நிலையில் பதவிப் பிரமாண நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புதிய பிரதமராக நரேந்திர மோடி இன்று (08) பதவியேற்பதாக முதலில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இவ்வாறான நிலைமை காரணமாக பதவியேற்பு 09ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சந்திர பாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியின் நடவடிக்கைகளே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

வழங்கப்பட்ட விதிமுறைகளின் அடிப்படையில் 07 அமைச்சரவை அமைச்சு பதவிகளையும், சபாநாயகர் பதவியையும் தெலுங்கு தேச கட்சி கோரியிருந்தது.

நேற்றிரவு வரை அக்கட்சியின் அமைச்சர் பதவிகளுக்கு பாஜகவுக்கும் உடன்பாடு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் பதவியேற்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.