மலாவியின் துணை ஜனாதிபதி பயணித்த இராணுவ விமானம் காணாமல் போயுள்ளது!

தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடான மலாவியின் துணை ஜனாதிபதி சவுலோஸ் கிளாஸ் சிலிமா பயணித்த இராணுவ விமானம் காணாமல் போயுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மலாவி தலைநகர் லிலாங்வேயில் இருந்து துணை ஜனாதிபதி சவுலோஸ் கிளாஸ் சிலிமா (51) மற்றும் 9 பேருடன் திங்கட்கிழமை காலை புறப்பட்ட மலாவி பாதுகாப்பு படை விமானம், ரேடாரில் இருந்து வெளியேறியதாக அந்நாட்டு ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ரேடாரில் இருந்து விலகியதில் இருந்து விமானத்துடன் தொடர்பு கொள்ள விமான அதிகாரிகளின் அனைத்து முயற்சிகளும் இதுவரை தோல்வியடைந்துள்ளன” என்று மலாவியின் ஜனாதிபதி அலுவலகம் மற்றும் அமைச்சரவை தெரிவித்துள்ளது.

விமான நிபுணர்களால் விமானத்தை கண்டுபிடிக்க முடியாமல் போனதை அடுத்து தேடுதல் மற்றும் மீட்பு பணி தொடங்கப்பட்டது. அந்நாட்டு நேரப்படி காலை 9:17 மணியளவில் விமானம் புறப்பட்டு, காலை 10:02 மணிக்கு Mzuzu சர்வதேச விமான நிலையத்தில் திட்டமிடப்பட்டப்படி தரையிறங்க வேண்டும், ஆனால் விமானம் அப்படி இல்லாமல், ரேடாரில் இருந்து விலகியது.

மேலும் இந்த விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.