பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் பதவியேற்றுள்ளார்.
பிரான்ஸில் இருந்து பங்களாதேஷூக்கு சென்றடைந்த 84 வயதான முகமது யூனுஸ், பங்களாதேஷில் செய்ய நிறைய விடயங்கள் உள்ளன என்று கூறினார்.
பங்களாதேஷில் 15 ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்த ஷேக் ஹசீனா, மக்களின் எதிர்ப்பால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறி, தற்போது இந்தியாவில் இருப்பதாக தகவல்கள் தெரிசிக்கின்றன.