சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாலமுனை அமைப்பாளர் ஏ.எல்.அலியார் அவர்களை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலிருந்து இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்தியுள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகம் நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்
கட்சியின் அம்பாறை மாவட்ட செயற்குழு கூட்டத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் பைஸல் காசிம் அவர்களுடனான முரண்பாட்டைத் தொடர்ந்தே இவ் இடைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த கூட்டம் அட்டாளைச்சேனையில் ஏற்பட்ட போது கைகலப்பாக மாறியதும் குறிப்பிடத்தக்கது.