ஈரான் அதிபரின் ஹெலிகொப்டர் விபத்திற்கான காரணம் வௌியானது

மறைந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணம் செய்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதற்கான காரணத்தை அந்நாட்டு அரசுடன் தொடர்புடைய செய்தி நிறுவனம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

சீரற்ற வானிலை மற்றும் விமானத்திற்கு தனது எடையை கட்டுப்படுத்த முடியாமல் விமானம் விபத்துக்குள்ளானதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் நடந்த குறித்த விபத்தில் ஈரான் அதிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்து தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், விமானம் தாக்கப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் வெளிப்புற தொந்தரவுகள் ஏற்பட்டதா என்பது தெரியவரவில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

அஜர்பைஜான் எல்லைக்கு அருகே உள்ள மலைப்பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியபோது, விமானத்தில் ​​நிர்ணயிக்கப்பட்ட அளவை விட இரண்டு பேர் பயணித்திருந்தமை தெரியவந்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *