முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்கள் எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி மருந்துகளை கொள்வனவு செய்தமை தொடர்பான வழக்கு இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தரமற்ற தடுப்பூசி சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பெப்ரவரி 02ஆம் திகதி கைது செய்யப்பட்டதுடன், சந்தேகநபர் மறுநாள் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
அதன்படி, தற்போது வரை முன்னாள் சுகாதார அமைச்சர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.