“Hall of Fame” விருதைப் பெற்றார் முரளிதரன்!!

(UDHAYAM, COLOMBO) – Hall of Fame விருதைப் பெற்ற முதல் இலங்கை வீரராக இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் பதிவாகியுள்ளார்.

இதன் மூலம் சேர். பிரட்மன், இயன் செப்பல், காபில்ட் சோபர்ஸ், கர்ட்லி அம்புரோஸ் ஆகியோரின் வரிசையில் முரளிதரனும் இணைந்து கொண்டுள்ளார்.

கிரிக்கட் உலகில் அதீத ஆற்றலை வெளிப்படுத்தி புகழ் பெற்ற வீரர்களை சர்வதேச கிரிக்கட் சபை Hall of Fame விருது வழங்கி கௌரவிக்கின்றது.

அந்த வகையில், இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரனுக்கும் நேற்யை தினம் Hall of Fame  விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

டெஸ்ட் போட்டிளில் 800 விக்கட்டுகளையும், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 534 விக்கட்டுகளையும் வீழ்த்தியுள்ள முரளிதரன், 2011 ஆம் ஆண்டு உலகக்கிண்ணத் தொடருடன் ஓய்வு பெற்றமை குறிப்பிடத்தக்கது.

[ot-video][/ot-video]

COMMENTS

Wordpress (0)
Disqus ( )