உயர்தர காகிதங்கள் மாத்திரமே பயன்படுத்தப்படுவதாக கல்வி அமைச்சு அறிவிப்பு.

(UDHAYAM, COLOMBO) – பாடசாலை பாடப் புத்தகங்களை தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படும் கடதாசி வகைகள் உடல் சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கக் கூடியவை அல்ல என்று  கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

உரிய தராதரங்களுடன் கூடிய கடிதாசிகளில் புத்தகங்கள் அச்சிடப்படுகின்றன. இவை வெள்ளம் முதலான இயற்கை அனர்த்தங்களுக்கு தாக்குப் பிடிக்கக் கூடியவை. ஜப்பான், சீனா முதலான நாடுகளிலும் இவையே பயன்படுத்தப்படுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

இந்த கடதாசிகள் பரீட்சார்த்த ரீதியில் தரம் ஏழு வகுப்புக்குரிய புவிச்சரிதவியல் பாடப் புத்தகத்தை அச்சிட பயன்படுத்தப்பட்டன.

இதற்கு முன்னதாக கடதாசியின் தரம் பற்றி சுகாதார அமைச்சு,  கைத்தொழில் அபிவிருத்தி நிறுவகம், கடதாசி உற்பத்தி நாடுகள் ஆகியவற்றில் இருந்த தரச்சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளன. இந்த கடதாசிகளில் பார உலோகங்களோஇ விஷத்தன்மை வாய்ந்த பதார்த்தங்களோ அடங்கியிருக்கவில்லை என்பது சோதனைகளிலும் உறுதிப்படுத்தப்பட்டதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *