டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் கோலி முன்னேற்றம்

(UTV|COLOMBO)-சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் முதல் 4 இடங்களில் மாற்றம் இல்லை. ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் முதலிடத்திலும், இங்கிலாந்தின் ஜோ ரூட் 2-வது இடத்திலும், நியூசிலாந்தின் கனே வில்லியம்சன் 3-வது இடத்திலும், இந்திய நட்சத்திர வீரர் புஜாரா 4-வது இடத்திலும் நீடிக்கிறார்கள்.

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்டில் 104 ரன்கள் விளாசிய இந்திய கேப்டன் விராட் கோலி ஒரு இடம் ஏற்றம் கண்டு 5-வது இடத்தை பிடித்துள்ளார்.

பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதலிடத்தில் தொடருகிறார். கொல்கத்தா டெஸ்டில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாத இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா ஒரு இடம் சறுக்கி 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். தென்ஆப்பிரிக்காவின் காஜிசோ ரபடா ஒரு இடம் முன்னேறி 2-வது இடத்திலும், இந்தியாவின் அஸ்வின் 4-வது இடத்திலும் இருக்கிறார்கள். கொல்கத்தா டெஸ்டில் மொத்தம் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகனாக ஜொலித்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் 29-வது இடமும் (8 இடம் ஏற்றம்), முகமது ஷமி 18-வது இடமும் (ஒரு இடம் உயர்வு) வகிக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *