(UTV|COLOMBO)-இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்பிற்கு 320 ஓட்டங்களை பெற்றுள்ளது.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக திசர பெரேரா 3 விக்கெட்டுக்களையும் நுவன் பிரதீப் 2 விக்கெட்டுக்களையும் பெற்றனர்.
இந்த போட்டியில் வெற்றி பெற இலங்கைக்கு அணிக்கு 321 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இலங்கை, சிம்பாப்வே, பங்களாதேஷ் அணிகள் மோதும் முத்தரப்பு கிரிக்கட் தொடர் பங்களாதேஷில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
