(UTV|HAWAI)-ஹவாய் தீவுகளின் ஹோனோலுலு பகுதியில் உள்ள கிலுயுயே எரிமலையில் நேற்று வெடிப்பு ஏற்பட்டது. இதன்காரணமாக நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. சுமார் 6 மைல் உயரத்திற்கு புகை பரவியுள்ளது. மேலும் பல மீட்டர் தூரத்திற்கு எரிமலை குழும்பு பரவியுள்ளது.
இந்த எரிமலை வெடிப்பினால் அப்பகுதியில் உள்ள 37 வீடுகள் சேதமடைந்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் எரிமலை குழம்புகள் அப்பகுதி முழுவதும் ஆக்கிரமித்த வண்ணம் உள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் 2000-க்கும் மேற்பட்ட மக்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் சுற்றுலா பயணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 4-ம் தேதியும் இந்த எரிமலை வெடித்து சிதறியது என்பது குறிப்பிடத்தக்கது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]