மூதூரில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில்

(UDHAYAM, COLOMBO) – மூதூர் வலய கல்வி பணிப்பாளரை இடமாற்றுமாறு கோரி மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த அல் மினா,அல் ஹிதாய,அல் ஹிலால்,அல் மினார், ஆகிய பாடசாலைகளைச்சேர்ந்த மாணவர்களும் ஆசிரியர்களும் இணைந்து மூதூர் வலய கல்வி அலுவலகத்திற்கு முன் இன்று காலை 8.00 மணி முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வலய கல்வி பணிப்பாளர் ஆசிரியர்களை அவமானப்டுத்தினார் எனக்கூறியே ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் பாடசாலைகளில் நடக்கும் பிழைகளை தட்டிக்கேட்டதனால் தமக்கு எதிராக தன்னால் அடையாளப்படுத்தபட்டவர்களே தமக்கு எதிராக ஆர்பாட்டத்தில் ஈடுபடுவதாக அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *