நியூசிலாந்து 6 ஓட்டங்களால் வெற்றி

(UDHAYAM, NEW ZEALAND) – தென்னாபிரிக்காவுடன் இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் நியூசிலாந்து அணி 6 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

க்ரிஸ்ட்சர்ச்சில் இடம்பெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கட்டுக்களை இழந்து 289 ஓட்டங்களை பெற்றது.

இதன் போது ரோஸ் டெய்லர் ஆட்டமிழக்காமல் 102 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கட்டுக்களை இழந்து 283 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

5 போட்டிகளை கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றிகளை பெற்று சமநிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *