Headlines

சற்றுமுன் கைது செய்யப்பட்ட அலி சப்ரி ரஹீம் MP!

அண்மையில் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த, பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் சற்றுமுன் கற்பிட்டி பொலிஸில் ஆஜராகிய பின் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Read More

தமிழ் சமூகம் எதிர்கொள்ளும் தற்போதைய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல்.

தமிழ் சமூகம் எதிர்கொள்ளும் தற்போதைய பிரச்சினைகள் குறித்து கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமானுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஶ்ரீதரன் ஆகியோருக்கும் இடையிலான கலந்துரையாடல் கிழக்கு மாகாண ஆளுநரின் மாளிகையில் நேற்று(19) இடம்பெற்றது. இதன்போது பெருந்தோட்டத் தமிழர்களுக்கும் வடக்கு மற்றும் கிழக்குத் தமிழர்களுக்கும் இடையில் வலுவான நட்புறவை வளர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. இக்கலந்துரையாடலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவர் ராஜதுரை மற்றும் போசகர் ஜெகதீஸ்வரன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

Read More

ஜனாதிபதியின் சூழ்ச்சிக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அகப்பட கூடாது – முஜிபுர் ரஹ்மான்

ஜனாதிபதியினதும், அரசாங்கத்தினதும் சூழ்ச்சிக்கு அகப்படாமல் தேர்தல்கள் ஆணைக்குழு மக்களின் ஜனநாயக உரிமையை பாதுகாக்க வேண்டும். மஹிந்தானந்த அளுத்கமகேவின் நிலைக்கு ஜனாதிபதி சென்றுள்ளமை கவலைக்குரியது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதி தேர்தல் தற்போது சூடு பிடித்துள்ளது.ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கு ரணில் – ராஜபக்ஷ அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்து சூழ்ச்சி செய்கிறது….

Read More

அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

சர்வஜன வாக்குரிமையைப் பின்பற்றி ஜனநாயகத்தைப் பேணுவதில் இலங்கை தனித்துவம் கொண்டுள்ளது எனத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்த ஜனநாயக மரபைப் பேண அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும், அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் வலியுறுத்தினார் அரசியலமைப்பு திருத்தங்களை மேற்கொள்ளும் போது அந்த விடயத்துடன் தொடர்புடைய அனுபவமுள்ள ஒருவரிடம் தான் பொறுப்பை ஒப்படைத்ததாகவும், அதன் படி கே.என்.சொக்சி போன்ற சட்டத்தரணிகளைக் கொண்டு அவ்வாறான பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஜனாதிபதி நினைவு கூர்ந்தார். எவ்வாறாயினும், 2015ஆம் ஆண்டு அரசியலமைப்புத்…

Read More

தொடரும் ஆர்ப்பாட்டங்கள் – 35க்கும் அதிகமானவர்கள் பலி – ஊரடங்கை அறிவித்தது பங்களாதேஷ் அரசாங்கம்.

அரசவேலைவாய்ப்பில் ஒதுக்கீட்டு முறைகளிற்கு எதிரான மாணவர்களின் போராட்டம் பெரும் வன்முறையாக மூண்டுள்ளதை தொடர்ந்து பங்களாதேஸ் தலைநகர் டாக்காவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை 35க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த  நிலையிலேயே அரசாங்கம் ஊரடங்கை அறிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை நர்சிங்டி சிறைச்சாலை மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோடியுள்ள நிலையிலேயே பிரதமர் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு இராணுவத்தை பயன்படுத்தப்போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. வன்முறைகள் மூண்டதை தொடர்ந்து சுமார் 67 பேர் உயிரிழந்துள்ளனர் என…

Read More

மஹிந்தவை சந்தித்தார் அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர்.

அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ஸ்கொட் மொரிசன் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தினார். இந்த சந்திப்பு இன்று (19) வெள்ளிக்கிழமை காலை கொழும்பில் உள்ள முன்னாள் ஜனாதிபதிகளின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

Read More

மூதூரில் பஸ் விபத்து – 30க்கும் மேற்பட்டோர் காயம்.

மூதூர் – கங்கை பாலம் அருகே தனியார் பஸ் ஒன்று  விபத்துக்குள்ளானதில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று (19) மாலை இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமம் நோக்கி யாத்திரை சென்றவர்கள் பயணித்த பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றன. காயமடைந்தவர்கள் கிண்ணியா மற்றும் மூதூர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் இதுவரையில் தெரிய வரவில்லை். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

ஜனாதிபதி வேட்பாளருக்கு நான் தகுதியானவன்.

பாராளுமன்றத்திலிருந்து அரச தலைவரை தெரிவு செய்வது இம்முறை இடம்பெறக்கூடாதென பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். மக்களின் வாக்குகள் ஊடாகவே நாட்டின் தலைவர் தெரிவு செய்யப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். நாட்டை கட்டியெழுப்புவதில் எந்தவொரு சவாலுக்கும் முகம்கொடுக்க தான் தயார் என அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கும் தான் தகுதியானவர் என பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

Read More

பிரதமரின் உயரத்தை கிண்டலடித்த பத்திரிகையாளர் – 5,000 யூரோக்கள் அபராதம்.

இத்தாலி நாட்டின் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் உயரம் குறித்து கிண்டலடித்த அந்நாட்டு பெண் பத்திரிகையாளருக்கு நீதிமன்றம் 5,000 யூரோக்கள் அபராதம் விதித்துள்ளது. இத்தாலியில் சுயாதீன பத்திரிகையாளராக செயல்பட்டு வரும் ஜியுலியா கோர்ட்டீஸ் கடந்த 2021 இல் தனது எக்ஸ் பக்கத்தில் தற்போதைய பிரதமர் மெலோனியின் பின்னணியில் இத்தாலிய சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினி இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு மெலோனியின் உயரம் குறித்து கிண்டலடிக்கும் வகையில் பதிவிட்டிருந்தார். ஜியோர்ஜியா மெலோனி…நீங்கள் என்னைப் பயமுறுத்த வேண்டாம். நீங்கள் 1.2 மீட்டர் (4…

Read More

ஜனாதிபதி தேர்தல் – தேர்தல்கள் ஆணைக்குழு தலைவரின் அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தீர்மானித்தவாறு இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அடுத்த வாரம் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார் 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் தற்போது வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவின் பேரில் இந்த வரைவு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள நிலையிலேயே தேர்தல்கள் ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது.

Read More