வத்திக்கானில் நத்தார் தின சிறப்பு திருப்பலி

(UTV|COLOMBO) – உலகின் அனைத்து தேவாலயங்களிலும் நத்தார் தின சிறப்பு திருப்பலி நடைபெற்றது. வத்திக்கானில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் நத்தார் தின திருப்பலி ஒப்புக்கொடுக்கும் விழா திருத்தந்தை பிரான்சிஸ் தலைமையில் இடம்பெற்றது. “நீங்கள் தவறான கருத்துக்களைக் கொண்டிருந்திருக்கலாம், நீங்கள் ஒரு முழுமையான குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கலாம் … ஆனால் இறைவன் உங்களை தொடர்ந்து நேசிக்கிறார்” என அவர் கூறினார்.

Read More

போயிங் நிறுவனத்தின் தலைமை அதிகாரி பதவி நீக்கம்

(UTV|COLOMBO) – போயிங் நிறுவனத்தின் தலைமை அதிகாரி டென்னிஸ் மியூலன்பேர்க் (Dennis Muilenburg) பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். போயிங் ரக 2 விமானங்கள் விபத்துக்குள்ளான சம்பவத்தையடுத்து தலைமை அதிகாரி பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Read More

கஷோகி கொலையாளிகள் 5வருக்கு மரண தண்டனை

(UTV|COLOMBO) – சவூதி அரேபியா ஊடகவியலாளர் ஜமால் கஷோகி கொலையுடன் தொடர்புடைய 05 பேருக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் 02ம் திகதி கஷோகி கொடூரமாக துருக்கியின் இஸ்தாம்புல்லில் அமைந்துள்ள சவூதி துணைத் தூதரகத்தில் கொலை செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Read More

டிரம்பை பதவி நீக்கக் கோரும் தீர்மானம் நிறைவேறியது

(UTV|COLOMBO) – அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மீது எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி கண்டன தீர்மானம் கொண்டு வரப்பட்டு, குறித்த தீர்மானத்தின் மீது பாராளுமன்றத்தில் 14 மணி நேரம் விவாதம் நடத்தப்பட்டு அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் அதிபர் டிரம்ப்பை பதவி நீக்கக் கோரும் முதல் தீர்மானம் நிறைவேறியது. டிரம்ப்பை பதவி நீக்கக் கோரும் தீர்மானத்திற்கு ஆதரவாக 230க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் வாக்களித்தனர். 194 உறுப்பினர்கள் மட்டும் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தனர். சொந்த அரசியல் ஆதாயத்துக்காக அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய…

Read More

‘ப்ரக்சிட்’ நடைமுறையை 2020-க்கு மேல் நீட்டிக்க கூடாது

(UTV|COLOMBO) – ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகும் ‘ப்ரக்சிட்’ நடைமுறையை 2020-க்கு மேல் நீட்டிக்க கூடாது என்ற வாக்குறுதிக்கு சட்டவடிவம் அளிக்க பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

அமெரிக்கா – தலிபான்கள் இடையே பேச்சுவார்த்தை

(UTV|COLOMBO) – நீண்ட இடைவேளைகளுக்குப் பிறகு கட்டாரில் அமெரிக்கா தலிபான்கள் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. கட்டார் தலைநகர் தோஹாவில் இப்பேச்சுவார்த்தை நேற்று(08) ஆரம்பமாகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து ஆயிரக்கணக்கான அமெரிக்கத் துருப்புகளை வாபஸ் பெறுவது தொடர்பாக, தலிபான்களுடன் அமெரிக்கா கையெழுத்திடவிருந்த ஒப்பந்தம் இறுதி நேரத்தில் அமெரிக்காவினால் இரத்துச் செய்யப்பட்டு 3 மாதங்களின் பின் இப்பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளது.

Read More

‘White Island’ என்ற தீவிலுள்ள எரிமலையொன்று வெடிப்பு

(UTV|COLOMBO) – நியூஸிலாந்தின் வடக்கே அமைந்துள்ள ‘White Island’ என்ற தீவிலுள்ள எரிமலையொன்று இன்று(09) அதிகாலை முதல் வெடித்து, குமுறத் தொடங்கியுள்ளமையினால் சுமார் 20 பேர் காயமடைந்துள்ள நிலையில் அப்பகுதியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து அந்நாட்டு பிரதமர் ஜசிந்த ஆர்டெர்ன், எரிமலையானது வெடித்து, குமுற ஆரம்பித்த வேளையில் ‘White Island’ இல் அல்லது அதனை அண்மித்த பகுதியில் 100 சுற்றுலாப் பயணிகள் இருந்துள்ளதாகவும் மேலும் பலர் கணக்கெடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார். எரிமலை வெடித்து, குமுற…

Read More

இந்தியா – டில்லி தீ விபத்தில் 35 பேர் பலி

(UTV|COLOMBO) – இந்தியாவின் டில்லி தலைநகர் அனாஜ் தானிய மண்டியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 35 பேர் பலியாகியுள்ளனர். தலைநகர் டெல்லியில் உள்ள ஜான்சி ராணி சாலையில் அமைந்துள்ள தனாஜ் மண்டியில் இன்று(08) அதிகாலை பயங்கர தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து 30க்கு மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நீண்ட நேரம் போராடி தீயை அணைத்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த தீ விபத்தில் சிக்கி 35 பேர் பலியாகியுள்ளதாகவும், மேலும்…

Read More