மூடப்பட்ட ஆயிரக்கணக்கான கால்நடை பண்ணைகள்!

(UTV | கொழும்பு) – இலங்கையில் 14,000 கால்நடை பண்ணைகள் பல்வேறு காரணங்களால் அண்மையில் மூடப்பட்டுள்ளதாக அரசாங்கக் கணக்குகள் தொடர்பான நாடாளுமன்றக் குழு அல்லது கோபா குழுவில் தெரியவந்துள்ளது. இவ்வாறு மூடப்பட்டுள்ள பெரும்பாலான பண்ணைகள் சிறிய அளவிலானவை என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.பண்ணைகளில் கால்நடைகள் திருட்டு போவது அதிகரித்துள்ளதால் அவை மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் மேலும் குறிப்பிட்டுள்ளனர். எவ்வாறாயினும், விலங்குகள் திருட்டு காரணமாக சிறு பண்ணைகள் மூடப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது…

Read More

நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை உடனடியாக வாபஸ் பெறுங்கள் – சஜித்

(UTV | கொழும்பு) – நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை அடுத்த வாரம் 2 நாட்களுக்கு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்ற உத்தேசித்துள்ளனர்.இச் சட்டமூலம் உயர் நீதிமன்றத்தில் ஆராயப்பட்டபோது,இச் சட்டங்களில் 50% க்கும் மேலான பகுதிகள் சிறப்புப் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். இந்த சட்டமூலம் நிறைவேற்றப்படும் போது பொதுமக்களின் கருத்துச் சுதந்திரம்,பேச்சுரிமை,கருத்துக்களை வெளியிடும் சுதந்திரம்,அரசியல் செய்யும் சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை மற்றும் மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்படுகின்றன என சிவில் சமூக அமைப்புகள்,ஊடக அமைப்புக்கள் மற்றும் பல்வேறு பங்குதாரர்களுடன் நடத்திய மிக முக்கியமான தீர்மானம் மிக்க கலந்துரையாடலில் வெளிக்கொணரப்பட்டது.   இவ்வாறானதொரு நிலையிலேயே,இந்த சட்டமூலத்தை இரண்டு நாட்களுக்கு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளாது சம்பந்தப்பட்ட பங்குதாரர்களையும், பொதுமக்களையும் தொடர்பு கொண்டு கலந்துரையாடி,முக்கிய திருத்தம் செய்து, மனித உரிமைகள் பாதுகாக்கப்படும் வகையில் இச்சட்டமூலம் அமுல்படுத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் சபாநாயகரிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார்.   நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை அடுத்த வாரம் விவாதத்தில் இருந்து விலக்கிக் கொள்ளுமாறு சபாநாயகரிடம் கோரி அனுப்பியுள்ள விசேட கடிதம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார். நிகழ்நிலை காப்பு சட்டமூலம் என்ற பெயரில், ஏகாதிபத்தியம்,சர்வாதிகாரம் கோலோச்சி, தனி நபர் 220 இலட்சம் பேரின் மனித உரிமைகளை மீறுவதான செயலாகும்.இதனை வன்மையாக நிராகரிப்பதோடு நிபந்தனையின்றிய எதிர்ப்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்.அடுத்த வாரம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளாது,உயர் நீதிமன்றத்தின் முடிவுகளை மேலும் புரிந்து ஆராய்ந்து,அந்த முன்மொழிவுகளை மதித்து, ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் வேலைத்திட்டத்தில்,மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான சட்டமாக இதனை மீள முன்வைக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் யோசனை தெரிவித்தார்.   நாட்டில் ஏகாதிபத்தியத்திற்கு இடமில்லை. முக்கியமான தேர்தல் வருடமொன்றில் கடுமையான ஜனநாயக விரோத,சர்வாதிகார ரீதியிலான அவசரத்தனமான சட்டமூலங்கள் மூலம் பொது மக்களின் விருப்பத்தை நசுக்கவும் அழிக்கவும் இடமளிக்க மாட்டோம். இது குறித்து சபாநாயகர் கவனம் செலுத்த வேண்டும்.நாட்டினதும் மக்களினதும் நலன் கருதி,இந்த சட்ட மூலம் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றிக் கொள்வதை ஒத்திவைக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் கோரிக்கை விடுத்தார். BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Read More

அனைத்து அபிவிருத்தித் திட்டங்களும் பெப்ரவரியில் ஆரம்பிக்கப்படும் – அமைச்சர் பந்துல

(UTV | கொழும்பு) – இலங்கையின் கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இறுதி ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் அனைத்து அபிவிருத்தித் திட்டங்களும் பெப்ரவரி மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.வீதி அபிவிருத்திக்காக மாவட்ட அபிவிருத்திக் குழுக்களின் தலைவராக உள்ள பாராளுமன்ற உறுப்பினருக்கு 150 மில்லியன் ரூபாவும் சிறிய வீதிகளை அபிவிருத்தி செய்வதற்காக 50 மில்லியன் ரூபா கிராமிய அலுவல்கள் அமைச்சின் ஊடாக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர்…

Read More

கோட்டாவின் முறையற்ற வேலைத்திட்டமே பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் – ஆஷு மாரசிங்க

(UTV | கொழும்பு) – 2024 வாழ்க்கைச் செலவை தளர்த்தும் வருடமாக ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார்.அதனால் கொவிட் மற்றும் கோத்தாபய ராஜபக்ஷ்வின் முறையற்ற பொருளாதார வேலைத்திட்டம் காரணமாக மூடப்பட்ட தொழிற்சாலைகளை மீண்டும் ஆரம்பித்து நாட்டின் வருமானத்தை அதிகரிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்திருக்கிறார் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு…

Read More

இலங்கையில் கையடக்கத் தொலைபேசி பாவனையாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

(UTV | கொழும்பு) – இலங்கையில் கையடக்கத் தொலைபேசி பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக நிதி அமைச்சு வெளியிட்டுள்ள பொது நிதி மேலாண்மை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2023ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், நாட்டின் பொருளாதார நெருக்கடியில் பயன்படுத்தப்பட்ட நிலையான மற்றும் கையடக்க தொலைபேசிகளின் எண்ணிக்கை முறையே 19.4 சதவீதம் மற்றும் 5.3 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, 2023 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் கையடக்கத் தொலைபேசி இணைய இணைப்புகள் உட்பட இணைய…

Read More

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து வௌியான அறிவிப்பு!

(UTV | கொழும்பு) – 2024 வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்ட 10,000 ரூபா சம்பள அதிகரிப்பின் முதற்கட்டமாக 5,000 ரூபா கொடுப்பனவு தொடர்பான பணத்தை திறைசேரி விடுவித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அரசாங்க ஊழியர்களின் சம்பளத்திற்காக தற்போது சுமார் 95 பில்லியன் ரூபா செலவிடப்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனவரி மாதம் முதல் இந்த பணம் மேலும் 7 பில்லியன் ரூபாவால் அதிகரிக்கும் எனவும், ஏப்ரல் மாதம் முதல் 10,000 ரூபா சம்பள…

Read More

தமிழ் வாக்குகளுக்காக இராணுவத்தைக் ரணில் காட்டிக் கொடுக்கின்றார் – விமல் வீரவன்ச

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வாக்குகளை பெறுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இராணுவத்தினரை காட்டிக் கொடுக்கும் சட்டங்களை இயற்ற முயற்சிக்கிறார். சரத் பொன்சேகாவை தவிர ஏனைய இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யும் வகையில் உண்மையை கண்டறிதல் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்ட வரைபு தயாரிக்கப்பட்டுள்ளது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். கொழும்பில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற…

Read More

இலங்கை துறைமுகத்தை நோக்கி படையெடுக்கும் கப்பல்கள்!

(UTV | கொழும்பு) – செங்கடலில் ஹவுதி போராளிகளின் தாக்குதல்கள் காரணமாக கொழும்பு துறைமுகம் நோக்கி கப்பல்கள் படையெடுக்கத் தொடங்கியுள்ளதாக இலங்கை துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது. துறைமுகத்தின் மூன்று முனையங்களிலும் செயற்பாடுகளை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு துறைமுகத்தின் கேந்திர அமைப்பு காரணமாக மத்திய கிழக்கு, தெற்காசியா மற்றும் கிழக்கு ஆசியாவை நோக்கி இலகுவாக சென்றடைய முடியும் என துறைமுக அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது. தென்ஆபிரிக்காவை கடந்து செல்லும் கப்பல்கள் சந்திக்கும் முதலாவது துறைமுகம் கொழும்பு துறைமுகம் என்பதனால்…

Read More

துமிந்த சில்வா குறித்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது – சுமந்திரன் எம்.பி

(UTV | கொழும்பு) – மரணதண்டனைக் குற்றவாளியான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு செல்லுபடியற்றதென, உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரவேற்கத் தக்கதென தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அதேவேளை இலங்கை சரித்திரத்தில் முதல் தடவையாக, ஜனாதிபதியொருவரால் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு செல்லுபடியற்றதென, உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதாக சுட்டிக்காட்டிய சுமந்திரன், யாழ் மிருசுவில் படுகொலையாளி சுனில் ரத்நாயக்கவிற்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பையும் தாம் சவாலுக்குட்படுத்தியிருப்பதாகவும் இதன்போது தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பொதுமக்களின்…

Read More

தேர்தலை கூட நடத்த முடியாத நிலை!

(UTV | கொழும்பு) – ஜனாதிபதியால்,ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என்ற செய்தியை பரப்பி மக்களிடமிருந்து கிடைக்கும் கருத்துக்களை ஆராய்ந்து எடை போட்டு வருகிறார். சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் ஐ.தே.க வேட்பாளர் யார் என்பதில் ஜனாதிபதியும் மொட்டும் தற்போது குழப்பத்தில் உள்ளனர். உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு கூட முதுகெலும்பில்லாத இந்த அரசாங்கம் பொதுத் தேர்தல்,ஜனாதிபதித் தேர்தல் என்று தம்பட்டம் அடித்து வருகிறது.ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள ஐக்கிய மக்கள் சக்தியும் மக்களும் தயாராகவே உள்ளனர்…

Read More