Headlines

சைட்டம் தொடர்பாக முக்கிய தகவலை வௌியிட்ட கோப் குழு

(UDHAYAM, COLOMBO) – மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியை பல்கலைக்கழகமாக ஏற்றுக் கொள்வதற்கான வர்த்தமானி அறிவிப்புகள் எவையும் வெளியாக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. கோப் குழு எனப்படும் பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக் குழு நேற்று கூடிய போது, இந்த விடயம் வெளிப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்தக் குழுவின் உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்துள்ளார். கோப் குழுவானது, நேற்றையதினம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முன்னாள் இந்நாள் அதிகாரிகளையும், உயர் கல்வி அமைச்சின் முன்னாள் இந்நாள் அதிகாரிகளையும் அழைத்து…

Read More

மகளிருக்கான உலகக்கிண்ண கிரிக்கட் தொடர் ஜூனில் ஆரம்பம்

(UDHAYAM, COLOMBO) – மகளிருக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித்தொடர் எதிர்வரும் ஜூன் மாதம் இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ளது. சர்வதேச கிரிக்கட் சபை இதற்கான நிகழ்சி நிரலினை சர்வதேச மகளிர் தினத்தன்று வெளியிட்டது. இந்த 50 ஓவர்களைக்கொண்ட இந்த கிரிக்கெட் போட்டித்தொடர் ஜூன் மாதம் 24ம் திகதி முதல் ஜூலை மாதம் 23ம் திகதி வரை நடைபெறவுள்ளதாக சர்வதேச கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது. தகுதிபெற்றுள்ள அணிகள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இலங்கை ,பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, மேற்கிந்திய தீவுகள் ஒரு குழுவிலும்…

Read More

எங்களுக்கு அனுதாப விதவை அரசியல் வேண்டாம் – சர்வதேச மகளிர் தின நிகழ்வில் மட்டு மாவட்ட அரசாங்க அதிபர்

(UDHAYAM, COLOMBO) – எங்களுக்கு அனுதாப அரசியல் வேண்டாம். விதவை அரசியல் வேண்டாம். அரசியலுக்காக துணிவோடு, அர்ப்பணிப்போடு, நேர்மையோடு திட சங்கல்ப்பத்தோடு பங்காற்றுவேன் என்கிற பெண்கள் தான் அரசியலுக்கு வேண்டும் என்று மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார். மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரியில் தொழில்நுட்பக் கல்லூரி அதிபர் ரி.ரவிச்சந்திரன் தலைமையில் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ்; இதனைத் குறிப்பிட்டார்….

Read More

வடக்கில் பன்றிக்காய்ச்சல்

(UDHAYAM, COLOMBO) – வட மாகாணத்தில் H1N1 எனப்படும் இன்புளுவன்ஸா நோய்க்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படும் 400 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார அமைச்சர் பி.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து அதிகளவான நோயாளர்கள் பன்றிக்காய்ச்சலால் இனங்காணப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சி வைத்தியசாலையில் 244 பேர் தற்போது சிகிச்சை பெற்றுவருகின்றார்கள்.  இரத்தமாதிரி பரிசோதனையின் மூலம் 65 பேருக்கு இந்த நோய் பரவியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Read More

கொழும்பு நீதிமன்றத்தில் வைத்து 2 பெண்கள் கைது!!

(UDHAYAM, COLOMBO) – தனது உள்ளாடையில் கைபேசி மற்றும் போதை பொருளை மறைத்து வைத்து, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றிற்கு கொண்டு சென்றுள்ள 2 பெண்களை காவற்துறையினர் கைது செய்துள்ளனர். இன்று காலை கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள் தொடர்பில், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

Read More

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

(UDHAYAM, COLOMBO) – மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் இன்று மத்திய வங்கியின் முறி விநியோகம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். சர்ச்சைக்குரிய மத்திய வங்கியின் முறி விநியோகம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் இன்று அங்கு முன்னிலையாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இது தொடர்பில் அவருக்கு கடந்த 8 ஆம் திகதி அறிக்கவிக்கப்பட்டிருந்தது. இதன்பின்னர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் மற்றும் அதிகாரிகள் உட்பட்ட சிலர் வாக்குமூலங்களை பதிவு செய்திருந்தனர்….

Read More

இலங்கையர் ஒருவர் பிலிப்பைன்ஸின் கைது

(UDHAYAM, COLOMBO) – பிலிப்பைன்ஸின் நியுவா எசிஜா பகுதியில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுவர் துஸ்பிரயோகங்கள் தொடர்பில் நீண்டகாலமாக தேடப்பட்டு வந்த ஒருவரே இவ்வாறு கைதானதாக அந்த நாட்டின் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. ஏக்கநாயக்க குமார என்ற அவர், அந்த நாட்டின் பெண்கள் மற்றும் சிறார்களுக்கு எதிரான வன்முறைகள் தடுப்பு தட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

Read More

கூட்டு எதிர்க்கட்சி தலைவரை நியமிக்கும் அதிகாரம் எனக்கில்லை – சபாநாயகர்

(UDHAYAM, COLOMBO) – கூட்டு எதிர்கட்சியின் தலைவரை நியமிக்கும் அதிகாரம் தமக்கு கிடையாது என்று சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்ற தமக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் தமக்கு பதிலாக டலஸ் அழகப்பெருமவை கூட்டு எதிர்கட்சித் தலைவராக நியமிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன கடித மூலம் கேட்டிருந்தார். இது பற்றி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற குழுத் தலைவர் நிமால் சிறிபால டி சில்வாவுடன் கலந்துரையாடி தீர்மானத்தை எடுக்குமாறு சபாநாயகர் பாராளுமன்றத்தில்…

Read More

2016ல் இலங்கை துறைமுக அதிகார சபைக்கு 11 பில்லியன்கள் இலாபம்

(UDHAYAM, COLOMBO) – 2016ம் ஆண்டில் இலங்கை துறைமுக அதிகாரசபை ரூபாய் 11 பில்லியன்கள் இலாபமிட்டியுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார். துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சின் கேட்போர்கூடத்தில் நேற்று நடைப்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் வருடாந்த முன்னேற்ற அறிக்கையினை உத்தியோகப்பூர்வமாக வெளியிட்டபோது அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். இந்த அறிக்கை தொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் , கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நூற்றிற்கு 83 வீத வளர்ச்சியாகும் என்றும் பல்வேறுப்பட்ட சவால்களிற்கு மத்தியிலேயே இவ்வெற்றியை…

Read More

தொடரும் மழை

(UDHAYAM, COLOMBO) – நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழியக்கூடும்; என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் நண்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று திணைக்களம் அறிவித்துள்ளது. மன்னாரிலிருந்து பொத்துவில் ஊடாக கொழும்பு காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய இடங்களின் பல கடற்கரையோர பகுதகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் வெளியிட்டுள்ள…

Read More